உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இணையவழியில் தொலைதுார கல்வி அண்ணாமலை பல்கலை., துணை வேந்தர் கதிரேசன் தகவல்

இணையவழியில் தொலைதுார கல்வி அண்ணாமலை பல்கலை., துணை வேந்தர் கதிரேசன் தகவல்

சிதம்பரம்:சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில், விரைவில் இணைய வழியில், தொலைதுாரக்கல்வி துவங்க உள்ளதாக துணைவேந்தர் கதிரேசன் தெரிவித்தார்.சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் தொலைதுார கல்வி இயக்கத்தில் விண்ணப்ப விற்பனை துவக்க விழா நடந்தது. பதிவாளர் சிங்காரவேலு தலைமை தாங்கினார். தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ் முன்னிலை வகித்தார். தொலைதுார கல்வி இயக்கக இயக்குநர் சீனிவாசன் வரவேற்றார். துணைவேந்தர் கதிரேசன் விண்ணப்ப விற்பனையை துவக்கி வைத்தார்.அப்போது அவர் கூறுகையில், 'இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை துவங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிக அளவில் 127 பாடப் பிரிவுகளை யு.ஜி.சி., அனுமதியுடன் நடத்தி வருகிறோம். விரைவில் இணையவழியில் தொலைதுாரக்கல்வி துவங்கப்பட உள்ளது.தொலைதூர மற்றும் இணையவழி கல்வி மையத்தின் வாயிலாக, இளங்கலை மற்றும் முதுகலைப் பாடப்பிரிவுகளுக்கு யு.ஜி.சி., மற்றும் தொலைநிலைக் கல்விக்குழு 2023-24ம் ஆண்டு முதல் 2028 ஜனவரி வரை அனுமதி வழங்கியுள்ளது. இவற்றில் 22 பாடப்பிரிவுகள் முதுகலை வகுப்புகள், 5 பாடப்பிரிவுகளும், 98 பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புக்களையும் தொலைதூரக் கல்வி முறையில் வழங்கப்படுகிறது.கடந்த ஆண்டு 29,754 மாணவர்கள் தொலைதுார கல்வியில் சேர்ந்தனர். இந்த ஆண்டு 45 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி சேவையை வழங்க முடிவு செய்துள்ளோம். இந்த ஆண்டு, குறிப்பிடத்தக்க பாடமாக, எம்.பி.ஏ., எம்.சி.ஏ., பி.சி.ஏ., பாடத்திட்டத்திற்கு ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் கிடைத்துள்ளது' என்றார். நிகழ்ச்சியில் தொலைதுார கல்வி இயக்கக இணை இயக்குனர் விஜயன், துணை இயக்குனர் சீனிவாசன், பேராசிரியர் கண்ணப்பன், துணைவேந்தரின் நேர்முக செயலர் பாக்கியராஜ், பி.ஆர்.ஓ., ரெத்தினசம்பத், பாண்டியன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி