உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்த இணைய வழி பயிலரங்கம்

வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்த இணைய வழி பயிலரங்கம்

சிதம்பரம்: அண்ணாமலை பல்கலையில், வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்த இணைய வழி பயிலரங்கம் நடந்தது. அண்ணாமலைப் பல்கலைக்கழக, இயற்கை மற்றும் நீடித்த வேளாண்மை மையம், ஹைதராபாத் தேசிய வேளாண் விரிவாக்க மேலாண்மை சார்பில் பருவநிலை மாற்றத்திற்கான வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்த இணைய வழி பயிலரங்கம் நடந்தது. 3 நாட்கள் நடந்த பயிலரங்க துவக்க விழாவிற்கு, வேளாண் புல முதல்வர் அங்கையர்கண்ணி தலைமை தாங்கினார். வேளாண்மை மைய இயக்குனர் ராமன் வரவேற்றார். ஹைதராபாத் தேசிய வேளாண் விரிவாக்க மேலாண்மை இயக்குனர் பாலசுப்ரமணி, துவக்க உரையாற்றினார். உழவியல் துறை தலைவர் சுந்தரி, முதன்மை விஞ்ஞானி கண்ணன் வாழ்த்துரை வழங்கினர். பயிலரங்கில், 12 தலைப்புகளில் அமர்வுகள் நடைபெற்றது. இதில் தேசிய நிறுவன விஞ்ஞானிகள் மற்றும் பல்கலைகழக பேராசிரியர்கள் பங்கேற்று கருத்துகளை வழங்கினர். நிறைவு விழாவில், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ், சிறப்புரையாற்றினார்.ராமன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை