உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நெய்வேலி ஆர்ச்கேட்டில் பயணியர் நிழற்கூடம் திறப்பு

நெய்வேலி ஆர்ச்கேட்டில் பயணியர் நிழற்கூடம் திறப்பு

நெய்வேலி: நெய்வேலி ஆர்ச்கேட் வளாகத்தில் என்.எல்.சி., நகர நிர்வாகத் துறை சார்பில், புதிய பயணியர் நிழற்கூடம் திறக்கப்பட்டது.சென்னை -தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் நெய்வேலி ஆர்ச்கேட் எதிரே சாலை விரிவாக்கப்பணிகள் முடங்கியுள்ளது. இதனால், பொதுமக்கள் மட்டுமின்றி என்.எல்.சி., பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர்.நெய்வேலி ஆர்ச்கேட் வளாகத்தில் பயணிகள் நிற்க வசதியில்லாத அவலம் நீடித்தது. இந்நிலையில், என்.எல்.சி.நகர நிர்வாகத்தின் சார்பில் அப்பகுதியில் பயணிகள் அமர்வதற்கு ஏதுவாக புதிய பயணியர் நிழற்கூடம் கட்டப்பட்டது. இக்கட்டடத்தை என்.எல்.சி.,மனிதவளத்துறை இயக்குநர் சமீர் ஸ்வரூப் நேற்று திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில் என்.எல்.சி., நகர நிர்வாகத்துறை முதன்மை பொது மேலாளர் சிந்துபாபு, பொது மேலாளர் கனகராஜ், உதவி நகர நிர்வாகத்துறை அதிகாரி கணேஷ் பாண்டி, துணை பொது மேலாளர்கள் பெருமாள், கண்ணன் முதன்மை மேலாளர் செந்தமிழ்செல்வன். பன்னீர்செல்வம் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ