உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

பெண்ணாடம், ஜூலை 9-பெண்ணாடத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு கொள்முதல் நிலைய எழுத்தர் புஷ்பராஜ் தலைமை தாங்கி, கொள்முதல் பணியை துவக்கி வைத்தார். முன்னோடி விவசாயிகள் செந்தமிழன், பாபு, முருகானந்தம், பாண்டுரங்கன், விவசாயிகள், பொது மக்கள் உட்பட பலர் பங்கேற்றனர். அதில், பெண்ணாடம் பகுதியில் அறுவடை செய்த குறுவை நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை