உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுாரில் மாடியிலிருந்து விழுந்த பெயிண்டர் சாவு

கடலுாரில் மாடியிலிருந்து விழுந்த பெயிண்டர் சாவு

கடலுார்: கடலுாரில் தனியார் பள்ளியில் பெயிண்டிங் வேலை செய்த தொழிலாளிக்கு வலிப்பு வந்து மாடியிலிருந்து கீழே விழுந்து இறந்தார்.சென்னை பெரம்பூர் மங்களபுரத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார்,38; பெயிண்டர். இவர் நேற்று மதியம் கடலுாரில் உள்ள தனியார் பள்ளியின் முதல் மாடியில் பெயிண்டிங் வேலை செய்து வந்தார்.அப்போது எதிர்பாராதவிதமாக சதீஷ்குமாருக்கு வலிப்புநோய் ஏற்பட்டு, மாடியிலிருந்து கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.இதுகுறித்து கடலுார் புதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ