| ADDED : ஜூன் 15, 2024 04:56 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த மாத்துார் காலனியை சேர்ந்தவர் பாக்யராஜ்,40; பெயிண்டர். இவர் தனது நண்பரான தி.மு.க.,வை சேர்ந்த ஊராட்சி தலைவர் சுப்ரமணியன் மகன் கலைவாணன் (எ) ராம்கி, 38. என்பவருடன் கடந்த 11ம் தேதி மது அருந்தினார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், கலைவாணன் பீர் பாட்டிலால் பாக்கியராஜ் தலையில் தாக்கினார். அதில் படுகாயமடைந்த பாக்கியராஜ் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.மங்கலம்பேட்டை போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிந்து, கலைவாணனை கைது செய்தனர். இந்நிலையில் மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாக்யராஜ், நேற்று முன்தினம் இறந்தார்.பாக்யராஜ் கொலை வழக்கில் போலீசார் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகக் கூறி அவரது உறவினர்கள் நேற்று காலை 11:00 மணிக்கு விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை சாலையில் கோ.பூவனுார் பஸ் நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை சமாதானம் செய்த போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதனைத் தொடர்ந்து இவ்வழக்கு தொடர்பாக கலைவாணனின் தந்தையான ஊராட்சி தலைவர் சுப்ரமணியன்,68; என்பவரை மங்கலம்பேட்டை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.