உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சுப்பிரமணியசுவாமி கோவிலில் நாளை பங்குனி உத்திர விழா

சுப்பிரமணியசுவாமி கோவிலில் நாளை பங்குனி உத்திர விழா

கடலுார்: குறிஞ்சிப்பாடி சிங்கபுரி சுப்பிரமணியசுவாமி கோவிலில் நாளை 24ம் தேதி பங்குனி உத்திர விழா நடக்கிறது.விழாவையொட்டி, கடந்த 13ம் தேதி சிம்ம வாகனம், 14ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, அங்குரார்பணம், நவக்கிரக ேஹாமம், வெள்ளி மூஷிக வாகன வீதியுலா நடந்தது. தொடர்ந்து இரவில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் காலை பிரணவ உபதேசம், இரவு திருக்கல்யாண கைலாச பரிவதம், நேற்று காலை பல்லக்கு, இரவு பிச்சாண்டவர் புறப்பாடு நடந்தது. இன்று 23ம் தேதி மாலை 3:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருத்தேர் வடம் பிடித்தல், இரவு சிவகாமி அம்மாள் சமேத நடராஜர் புறப்பாடு நடக்கிறது.இதையடுத்து, நாளை (24ம் தேதி) காலை 10:00 மணிக்கு அபிேஷகம், பங்குனி உத்திர விழா, பகல் 1:30 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது. 25ம் தேதி காலை 10:00 மணிக்கு அபிேஷகம் மற்றும் இரவு தெப்பல் விழா மற்றும் 26ம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ