உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பா.ஜ.,வுக்கு எதிராக பேசுவதால் ரெய்டு வி.சி., கட்சி திருமாவளவன் குற்றச்சாட்டு

பா.ஜ.,வுக்கு எதிராக பேசுவதால் ரெய்டு வி.சி., கட்சி திருமாவளவன் குற்றச்சாட்டு

சிதம்பரம்: ''பா.ஜ.,வுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருவதால் என்னை அச்சுறுத்தவே எனது வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது'' என, வி.சி., கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்.சிதம்பரம் தொகுதி வேட்பாளரான வி.சி., கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியதாவது:தி.மு.க., கூட்டணிக்கு வரவேற்பு உள்ளது. தமிழ்நாட்டில் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது. 40 தொகுதிகளிலும் தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.எப்போதும், வேட்பாளர்கள் தங்கும் இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்துவது இல்லை. தொழிலதிபர்கள் மீது சில நேரங்களில் சோதனை நடத்தப்படுவது உண்டு. அந்த வரிசையில் நான் இல்லை. எனக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது.தொண்டர்கள், பொதுமக்களிடம் நிதி திரட்டி ஒவ்வொரு தேர்தலையும் சந்தித்து வருகிறோம். மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடி செய்யும் தவறுகளை தொடர்ந்து விமர்சித்து வருகிறேன். இதன் காரணமாகவே என் மீது சோதனைகள் நடத்தப்படுகிறது.தொடர்ந்து பா.ஜ.,வுக்கு எதிராக பேசி வருவதால் என்னை அச்சுறுத்த எனது வீட்டில் சோதனை நடந்துள்ளது. பா.ஜ.,வுக்கு தோல்வி பயம். தி.மு.க., அமைச்சர்கள் இரண்டு பேர் என் தொகுதியிலேயே இருந்து எனது வெற்றிக்காக உழைக்கின்றனர். ஆளும் கட்சி வரிசையில் இல்லாமல், எதிர்க்கட்சி வரிசையில் இருப்பதால், பெரும்பாலான திட்டங்களை கொண்டு வர முடியவில்லை. ஐந்து ஆண்டுகளில் 2 ஆண்டுகள் கொரோனா தொற்றால் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கப்படவில்லை. மூன்று ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளேன்.இவ்வாறு திருமாவளவன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை