உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பஸ்கள் நிற்காததால் பயணிகள் அவதி

பஸ்கள் நிற்காததால் பயணிகள் அவதி

மந்தாரக்குப்பம் : மந்தாரக்குப்பம் பழைய பஸ் நிலையம் முன்பு பஸ்கள் நிற்காததால் பயணிகள் அவதியடைகின்றனர்.என்.எல்.சி., சுரங்க விரிவாக்கப் பணிக்காக மந்தாரக்குப்பம் பஸ் நிலையம் அகற்றப்பட்டு, வடக்குவெள்ளுரில் அமைக்கப்பட்டது. இந்நிலையில், மந்தாரக்குப்பம் பழைய பஸ் நிலையம் முன்பு, புவனகிரி தொகுதி அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. பல லட்சம் செலவில் அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடையில் பயணிகள் பஸ்சுக்காக காத்திருந்தும், பஸ்கள் நிற்பதில்லை. இதனால், பயணிகள் சரியான நேரத்திற்கு தங்களது ஊர்களுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.எனவே பஸ் நிலையம் முன்பு அனைத்து பஸ்களும் நின்று செல்ல போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ