உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விவசாயிகளுக்கு நிலுவை தொகை வழங்கல்

விவசாயிகளுக்கு நிலுவை தொகை வழங்கல்

நெல்லிக்குப்பம் : கோர்ட் உத்தரவுபடி ஈ.ஐ.டி.,பாரி ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை வழங்கப்பட்டது.நெல்லிக்குப்பத்தில் ஈ.ஐ.டி., பாரி சர்க்கரை ஆலை உள்ளது. ஆலைக்கு விவசாயிகள் சப்ளை செய்யும் கரும்பில் கழிவுக்காக 1 சதவீதம் பிடித்தம் செய்ய சட்டம் உள்ளது. ஆனால் கூடுதல் சதவீதம் கழிவாக பிடித்தம் செய்யப்பட்டது. இதை எதிர்த்து தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் தென்னரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். விசாரித்த நீதிபதி, 1 சதவீதத்துக்கு மேல் கழிவுக்காக பிடித்தம் செய்த தொகையை விவசாயிகளுக்கு வழங்க உத்தரவிட்டார். அதை தொடர்ந்து நேற்று ஆலை நிர்வாகம் கூடுதலாக பிடித்தம் செய்த தொகை 2 கோடியே 69லட்சம் ரூபாயை விவசாயிகளுக்கு வழங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை