உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விதிமுறை மீறிய லாரிகளுக்கு அபராதம்

விதிமுறை மீறிய லாரிகளுக்கு அபராதம்

கடலுார்: கடலுார் மாநகராட்சியில் விதிமுறை மீறி வந்த இரண்டு லாரிகளுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.கடலுார் மாநகராட்சி பாரதி சாலை வழியாக காலை 8:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல போக்குவரத்து போலீசார் சார்பில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாறாக, ஜவான்பவன் சாலையில் இருந்து செம்மண்டலம் வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று காலை 9:30 மணியளவில் விதிமுறை மீறி பாரதி சாலையில் இரண்டு சரக்கு லாரிகள் சென்றது. இதைக்கண்ட போக்குவரத்து இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் ஆகியோர் இரண்டு லாரிகளையும் மடக்கி, வழக்கு பதிந்து தலா 3,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை