உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வண்டல் மண் கடத்தல் ஜரூர் தகவல் தெரிவிக்க மக்கள் அச்சம்

வண்டல் மண் கடத்தல் ஜரூர் தகவல் தெரிவிக்க மக்கள் அச்சம்

ஏரி, குளங்களை துார்வாரும் நோக்கில் வண்டல் மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி கொடுத்தது. ஆனால், நீர்நிலைகளில் இருந்து எடுக்கப்படும் மண் பெரும்பாலும் தனியாரிடம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.ஆங்காங்கே அனுமதித்த அளவுக்கு அதிகமாக மண்ணை தோண்டி எடுத்ததால் சிறுவர்கள், கால்நடைகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.அதுபோல், ரியல் எஸ்டேட் மனைகளில் வண்டல் மண்ணை கொட்டி, சமப்படுத்தி விற்பனை செய்யும் அவலம் அதிகரித்தது. இதனைச் சுட்டிக்காட்டி, மங்கலம்பேட்டை புறவழிச்சாலையில் ரியல் எஸ்டேட் மனையில் வண்டல் மண் கொட்டியுள்ளதை 'தினமலர்' நாளிதழில் கடந்த வாரம் படத்துடன் செய்தி வெளியானது.இதனால் ஏரி, குளங்களில் வண்டல் மண் கடத்தல் நிறுத்தப்படும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்தனர்.ஆனால், உள்ளூர் போலீசார் துணையுடன் வண்டல் மண் கடத்தல் அதிகரித்துள்ளது. சமீபத்தில் குறிப்பிட்ட பகுதியை பார்வையிட்ட வருவாய்த்துறை அலுவலர், அதனை வீடியோ மற்றும் புகைப்படம் பிடித்து மாவட்ட நிர்வாகத்துக்கு அறிக்கையும் சமர்ப்பித்தார். இருப்பினும் அதே பகுதியில் ஏரி மண் கொட்டப்பட்டு வருகிறது. இதைப் பார்த்த பொதுமக்கள் குழந்தையை கிள்ளிவிட்டு, தொட்டிலை ஆட்டுவது இதுதானோ என புலம்பினர்.அதுபோல், வருவாய்த்துறை, போலீசார் துணையுடன் வண்டல் மண் கடத்தப்படுவது ஆளுங்கட்சி நிர்வாகிகள் என்பதால் புகார் தெரிவித்த சமூக ஆர்வலர்கள் கலக்கத்தில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ