உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பருவகால பணியாளர்கள் பணி நிரந்தரம் கோரி மனு

பருவகால பணியாளர்கள் பணி நிரந்தரம் கோரி மனு

விருத்தாசலம்: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பருவகால பணியாளர்கள், பணி நிரந்தரம் கோரி அமைச்சர்களிடம் மனு கொடுத்தனர். விருத்தாசலத்தில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணியிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 2014 முதல், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கடலுார் மண்டலத்தில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பத்தாண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறோம்.பணியாளர்கள் பெரும்பாலானோருக்கு 45 முதல் 50 வயது கடந்து விட்டது. கொள்முதல் பணி இல்லாத நாட்களில் குடும்ப வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்ய முடியாமல் மிகவும் கஷ்டப்படுகிறோம். எனவே, குடும்ப நலன், வாழ்வாதாரம் கருதி, பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை