உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரயில் நிலையத்தில் போலீஸ் சோதனை

ரயில் நிலையத்தில் போலீஸ் சோதனை

சிதம்பரம்: சுதந்திர தின விழாவை முன்னிட்டு நேற்று சிதம்பரம் ரயில் நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையான போலீசார் சோதனை மேற்கொண்டனர். நாடு முழுவதும் இன்று 78 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. அதனையொட்டி தமிழகம் முழுவதும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சிதம்பரம் ரயில் நிலையத்தில், ரயில்வே போலீசார் சோதனை மேற்கொண்டனர் இன்ஸ்பெக்டர் அருண் தலைமையில், சிதம்பரம் ரயில் நடை மேடை, தண்டவாள பகுதிகள், அருகில் உள்ள உப்பனாற்று பாலம், ரயில் பயணிகளின் உடைமைகள், பயணிகள் காத்திருப்பு அறைகள்,வாகன நிறுத்த ஸ்டேடுகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரயில்வே போலீசார் சோதனை மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ