உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கல்

மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கல்

கிள்ளை : சிதம்பரம் கொத்தங்குடி முத்தையா நகர் ஆதிபரா சக்தி சித்தர் சக்தி பீட ஆண்டு விழாவை முன்னிட்டு, மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.சக்திபீட தலைவர் கோபி தலைமை தாங்கி, 2 மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை ரூ. 25,000 மற்றும் சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பழுதடைந்த கட்டடத்தை சீரமைக்க ரூ.15,000 என, மொத்தம் ரூ.40,000 வழங்கினார்.அருளானந்தம், பாலகுமார், அர்ச்சுனன் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் ஞானகுமார் வரவேற்றார். மத்திய பிரசாரக்குழு சுப்ரமணியன், முன்னாள் கூடுதல் செயலாளர் பார்த்தசாரதி, தெற்கு மண்டல செயலாளர் கண்ணன், தனமணிவாசகம், முன்னாள் ஊராட்சி தலைவர் ஜெய்சங்கர், கோவிந்த், ராமு, அஞ்சம்மாள், லதா, பூமாதேவி, மஞ்சுளா, சுமதி, சாந்தி ராமலிங்கம், தேவி உட்பட பலர் பங்கேற்றனர்.கார்த்திக்ராஜா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ