விருத்தாசலம், : விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில், நாளை முதல் மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு துவங்குகிறது.விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) சுரேஷ்குமார் செய்திக்குறிப்பு:2024 - 25ம் கல்வியாண்டிற்கான இளங்கலை மற்றும் இளம் அறிவியல் மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட அனைத்து வகுப்பினருக்கான பொது கலந்தாய்வு, நாளை (10ம் தேதி) துவங்கி, 13 வரையில், 4 நாட்கள் நடக்கிறது.அதன்படி, நாளை (10ம் தேதி) பி.எஸ்.சி., பிரிவில் காலை 9:30 மணி, சுழற்சி 1ல் விண்ணப்பித்தவர்கள் மட்டும் (தர மதிப்பெண் 400 முதல் 275 வரை), மாலை 2:00 மணிக்கு சுழற்சி 2ல் விண்ணப்பித்தவர்கள் மட்டும் (தர மதிப்பெண் 400 முதல் 275 வரை) பங்கேற்க வேண்டும்.11ம் தேதி பி.பி.ஏ., மற்றும் பி.காம்., பிரிவில் காலை 9:30 மணி, சுழற்சி 1ல் விண்ணப்பித்தவர்கள் அகாடமிக் தர மதிப்பெண் 200 முதல் 275 வரை மற்றும் தொழிற்கல்வி தர மதிப்பெண் 400 முதல் 275 வரையும், மாலை 2:00 மணி, சுழற்சி 2ல் விண்ணப்பித்தவர்கள் மட்டும் வணிகவியல் அகாடமிக் 400 முதல் 275 வரை, வணிகவியல் தொழிற்கல்வி 400 முதல் 275 வரை பங்கேற்க வேண்டும்.12ம் தேதி பி.ஏ., பிரிவில் காலை 9:30 மணி, வரலாறு மற்றும் பொருளியல் படித்தவர்கள் மட்டும் தமிழ் வழி தர மதிப்பெண் 400 முதல் 275 வரை, ஆங்கில வழி தர மதிப்பெண் 400 முதல் 275 வரையும், மாலை 2:00 மணி, தொழிற்கல்வி பயின்ற மாணவர்கள் தர மதிப்பெண் 400 முதல் 275 வரை பங்கேற்க வேண்டும்.13ம் தேதியன்று, பி.ஏ., பிரிவில் காலை 9:30 மணி, சுழற்சி 1ல் விண்ணப்பித்தவர்கள் மட்டும் சிறப்புத் தமிழ் 100 முதல் 35 வரை, பொதுத்தமிழ் 100 முதல் 70 வரை, ஆங்கிலம் 100 முதல் 60 வரையும், மாலை 2:00 மணி, சுழற்சி 2ல் விண்ணப்பித்தவர்கள் மட்டும் சிறப்புத் தமிழ் 100 முதல் 35 வரை, பொதுத்தமிழ் 100 முதல் 70 வரை, ஆங்கிலம் 100 முதல் 60 வரையும் பங்கேற்க வேண்டும்.பொது கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் அசல் கல்வி சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், அண்மையில் எடுக்கப்பட்ட பாஸ்போட் சைஸ் புகைப்படம் மற்றும் சான்றிதழ்கள் 3 நகல்கள் எடுத்து வர வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.