உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / துாய்மையான குடிநீர் வழங்க பொதுமக்கள் கோரிக்கை

துாய்மையான குடிநீர் வழங்க பொதுமக்கள் கோரிக்கை

மந்தாரக்குப்பம் : கம்மாபுரம் ஊராட்சி பகுதிகளில் குடிநீர் தொட்டிகளில் 'குளோரினேஷன் ' செய்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கம்மாபுரம் வட்டார ஊராட்சி பகுதிகளில் குடிநீரால் ஏற்படும் தொற்று பாதிப்பை தவிர்க்க மேல்நிலை தொட்டிகளில் குளோரினேஷன் செய்து கிராம பகுதிகளில் சுத்தமான குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமங்களில் மேல்நிலை தொட்டிகளில் பாசி படர்ந்து சிறுநுண்ணியர்கள் உற்பத்தியாகி வாந்தி, பேதி, காலரா போன்ற பாதிப்புகள் ஏற்படுத்தக் கூடும். இதனை தடுக்க ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளை சுத்தம் செய்து பாசிகளை அகற்றி குளோரின் கலந்து துாய்மையான குடிநீரை வினியோகிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். எனவே கிராமங்களில் தொற்று பாதிப்பை தவிர்க்க கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை