உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விருத்தாசலம் தொகுதியில் பொது பார்வையாளர் ஆய்வு

விருத்தாசலம் தொகுதியில் பொது பார்வையாளர் ஆய்வு

விருத்தாசலம் : கடலுார் லோக்சபா தொகுதிக்குட்பட்ட விருத்தாசலம் பகுதி ஓட்டுச்சாவடிகளை தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு செய்தார்.லோக்சபா தேர்தலை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையம் சார்பில், கடலுார் லோக்சபா தொகுதி பொது பார்வையாளராக டாரப் இம்சென் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், விருத்தாசலம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார். அப்போது, புதுக்கூரைப்பேட்டை, விருத்தாசலம் பெரியார் நகர், புதுக்குப்பம், வயலுாரில் உள்ள ஓட்டுச்சாவடிகள் மற்றும் பதற்றமான ஓட்டுச்சாவடிகள், மாதிரி ஓட்டுச்சாவடிகளை பார்வையிட்டார்.தொடர்ந்து, விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள ஸ்டிராங் ரூமை பார்வையிட்டார்.விருத்தாசலம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சையத் மெஹ்மூத், கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் உதயகுமார், வேப்பூர் தாசில்தார் மணிகண்டன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ