உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கழுதை வெட்டி வாய்க்காலில் ரெகுலேட்டர் பணி ஜரூர்

கழுதை வெட்டி வாய்க்காலில் ரெகுலேட்டர் பணி ஜரூர்

புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அருகே கழுதை வெட்டி வாய்க்காலில், பாசனத்திற்காக, ரெகுலேட்டர் அமைக்கும் பணி ஜரூராக நடந்து வருகிறது.புதுச்சத்திரம் அடுத்த மணிக் கொல்லை - தச்சக்காடு இடையே கழுதைவெட்டி வாய்க்கால் உள்ளது. இதன் மூலம் 2,350 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. இந்த வாய்க்கால் நபார்டு வங்கி நிதியுதவி மூலம், 4 கோடியே 86 லட்சம் ரூபாய் மதிப்பில், 11 கிலோ மீட்டர் தொலைவிற்கு தூர்வாருதல், சேந்திரக்கிள்ளை, பெரியக்குமட்டி, வில்லியநல்லூர், ஆகிய பகுதிகளில் ரெகுலேட்டர் அமைத்தல். சேதமடைந்த வாய்க்கால் கரைகளை, சீரமைத்து தடுப்புச் சுவர் கட்டுதல், கழுதை வெட்டி வாய்க்காலை அளவீடு செய்து, எல்லை கற்கள் நடுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.இந்நிலையில் மணிக்கொல்லை - தச்சக்காடு கழுதைவெட்டி வாய்க்கால் தற்போது தூர்வாரும் பணி நடந்து வருகிறது. மேலும் சேந்திரக்கிள்ளையில் ரெகுலேட்டர் கட்டும் பணி துவங்கியுள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ