உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பள்ளிவிடும் நேரத்தில் கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை

பள்ளிவிடும் நேரத்தில் கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மாணவிகளுக்கு வசதியாக பள்ளி விடும் நேரத்தில் போதிய அரசு டவுன் பஸ்கள் இயக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, புவனகிரி ஊழல் எதிர்ப்பு இயக்கம் தலைவர் குணசேகரன், கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 1,700 மாணவிகள் படிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பரங்கிப்பேட்டை சுற்றுவட்டாரத்தில் இருந்து சுமார் 3 கி.மீ., தூரத்தில்இருந்து பள்ளிக்கு வருகின்றனர். பள்ளி மாலை 4.10 மணிக்கு விடப்படுகிறது. அதற்கு முன்பாகவே பரங்கிப்பேட்டையில் இருந்து அரசு டவுன் பஸ்கள் மாலை 3.50 முதல் -4;10 மணிக்குள் சென்று விடுகிறது. அதன் பிறகு போதுமான பஸ் வசதியின்றி மாணவிகள் காத்து கிடக்கும் நிலை உள்ளது.மேலும், அப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், சிதம்பரம் வரை செல்பவர்கள் மற்றும் சிதம்பரம் செல்லும் பயணிகள்நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் நிலவுகிறது. எனவே, மாணவிகள் பயன்பெறும் வகையில் பள்ளி விடும் நேரத்தில் கூடுதல் டவுன் பஸ்கள் இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை