உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கரும்பு நிலுவை தொகை வழங்க மா.கம்யூ.,கோரிக்கை

கரும்பு நிலுவை தொகை வழங்க மா.கம்யூ.,கோரிக்கை

கடலுார் : அம்பிகா ஆருரான் சர்க்கரை ஆலை, விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை வட்டியுடன் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மா.கம்யூ., கோரிக்கை விடுத்துள்ளது.மா.கம்யூ., மாவட்ட மைய கூட்டம் சூரப்பநாயக்கன்சாவடி கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் உதயகுமார் தலைமை தாங்கினார். செயலாளர் மாதவன், மாவட்ட குழு மருதவாணன், கருப்பையா, சுப்பராயன், ராஜேஷ், கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில் கடலுார், சிதம்பரம் மற்றும் விருதாசலம் அரசு கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் சட்டக் கல்லுாரி துவங்க வேண்டும். அம்பிகா ஆருரான் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவை பாக்கி தொகையை வட்டியுடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆலை நிர்வாகம் வாங்கிய கடனுக்காக விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்புவதை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ