உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பள்ளி மாணவிகள் வசதிக்காக பஸ்சை நீட்டிக்க கோரிக்கை

பள்ளி மாணவிகள் வசதிக்காக பஸ்சை நீட்டிக்க கோரிக்கை

திட்டக்குடி: நல்லுாரிலிருந்து பெண்ணாடம் வரை இயங்கும் அரசு பஸ்களை, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வரை நீட்டிக்க, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.பெண்ணாடத்திலிருந்து ஒன்றிய தலைமையிடமான நல்லுார் வரை, தடம் எண்12 மற்றும் தடம் எண்9 ஆகிய இரு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. காலை மற்றும் மாலை நேரங்களில் சிறுமங்கலம், எரப்பாவூர், அருகேரி உட்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் இந்த பஸ்களில் ஏறிச்செல்கின்றனர். பெண்ணாடம் பஸ் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து சுமார் ஒரு கி.மீ., துாரமுள்ள பள்ளிக்கு மாணவிகள் நடந்தே செல்லும் நிலை உள்ளது. எனவே, காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவிகள் நலன் கருதி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வரை அரசு பஸ்களை இயக்க வேண்டும் என, போக்குவரத்துக்கழக நிர்வாகத்திற்கு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை