உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குடியிருப்போர் நலச்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

குடியிருப்போர் நலச்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

கடலுார் : கடலுார் தலைமை தபால் நிலையம் அருகில், அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.கூட்டமைப்பு தலைவர் பாலு பச்சையப்பன் தலைமை தாங்கினார். சங்க துணைத் தலைவர் ரவிச்சந்திரன் வரவேற்றார். பொதுச்செயலாளர் வெங்கடேசன், சிறப்புத் தலைவர் மருதவாணன், பொருளாளர் வெட்கட்ரமணி, விவசாயிகள் சங்க சரவணன், ஒருங்கிணைப்பாளர் ரவி கண்டன உரையாற்றினர். நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் கோண்டூர், கூத்தப்பாக்கத்தில் அணுகு சாலை ஏற்படுத்த வேண்டும். நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலை கழிவு நீர் கெடிலம் ஆற்றில் கலப்பதை தடுக்க வேண்டும். நகரில் திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலிறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.நிர்வாகிகள் தேவநாதன், கோபால், ராஜேந்திரன், கண்ணன், காசிநாதன், ராஜாகுமரேசன், செல்வராஜ், நடராஜன், ரங்கநாதன், செல்வகணபதி, சண்முகம், பாலு கலந்து கொண்டனர். தனுசு நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ