உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஓய்வு பெற்றோர் நல அமைப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஓய்வு பெற்றோர் நல அமைப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கடலுார் : கடலுார் அரசு போக்குவரத்து கழக அலுவலகம் முன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.தலைவர் கண்ணுசாமி தலைமை தாங்கினார். பொருளாளர் பழனிவேல் முன்னிலை வகித்தார். மாநில துணைத் தலைவர் பாஸ்கரன் சிறப்புரையாற்றினார். வங்கி ஊழியர் சங்க அகில இந்திய துணைத் தலைவர் மருதவாணன், ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல்., அலுவலர் பால்கி, மாவட்ட தலைவர் காசிநாதன் வாழ்த்துரை வழங்கினர். இதில், 103 மாத டி.ஏ.,வை உடனடியாக வழங்க வேண்டும். ஒப்பந்த முறை பணி நியமனத்தை கைவிட வேண்டும். வாரிசு வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.அப்போது, நிர்வாகிகள் முத்துக்குமரன், குணசேகரன், ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்