உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மறுமலர்ச்சி தொழிலாளர் சங்க வாயிற் கூட்டம்

மறுமலர்ச்சி தொழிலாளர் சங்க வாயிற் கூட்டம்

விருத்தாசலம்: விருத்தாசலம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில், வாயிற் கூட்டம் நடந்தது.மறுமலர்ச்சி தொழிலாளர் சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, கணேஷ்குமார் தலைமை தாங்கினார். துரைசெல்வன், ராம்குமார், விக்னேஸ்வரன் முன்னிலை வகித்தனர். சண்முக சுந்தரம் வரவேற்றார். மாநில செயலாளர் மணிமாறன், விழுப்புரம் மண்டல செயற்குழு உறுப்பினர் ரவி கண்டன உரையாற்றினர்.அதில், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய 103 மாத நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். 15வது ஊதிய பேச்சுவார்த்தையை உடனே துவங்க வேண்டும். ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய 18 மாத ஓய்வுகால பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்.வாரிசு அடிப்படையில் பணி, பழைய பென்சன் திட்டம், மினி பஸ்சை அரசே ஏற்று நடத்த வேண்டும், காலி பணியிடங்களுக்கு வேலை வாய்ப்புத்துறை மூலம் நிரந்தர பணி வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ