உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சுடுகாட்டிற்கு சாலை வசதி அ.தி.மு.க., பிரமுகர் கோரிக்கை

சுடுகாட்டிற்கு சாலை வசதி அ.தி.மு.க., பிரமுகர் கோரிக்கை

பரங்கிப்பேட்டை : புதுச்சத்திரம் வில்லியநல்லுார் நாடார் தெரு சுடுகாட்டிற்கு சாலை வசதி செய்துத்தர கலெக்டருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, அ.தி.மு.க., பிரமுகர் வில்லியநல்லுார் சுதாகர் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு;புதுச்சத்திரம் வில்லியநல்லுார் நாடார் தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த சமுதாய மக்களுக்கு சொந்தமான சுடுகாடு உள்ளது. அங்கு, கடந்த 40 ஆண்டுகளுக்கு முன், அரசு சார்பில், தகனமேடையுடன் சுற்றுச்சுவர், கை பம்பு வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், சுடுகாட்டிற்கு செல்ல பாதை வசதி இல்லாததால், இறப்பு ஏற்படும்போது அப்பகுதியினர் இறந்தவர் சடலத்தை கொண்டு செல்ல சிரமப்பட்டு வருகின்றனர். சுடுகாட்டிற்கு சாலை வசதி கேட்டு தொடர்ந்து, போராடி வருகின்றனர்.கடந்த மூன்று மாதங்களுக்கு முன், முதியவர் ஒருவர் உடல் நலகுறைவால் இறந்ததால் உடலை அடக்கம் செய்ய மிகவும் சிரமப்பட்டு துாக்கி சென்று அடக்கம் செய்தனர். எனவே, வில்லியநல்லுார் நாடார் தெரு சுடுகாட்டிற்கு செல்ல சாலை வசதி அமைத்தர வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ