உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சாலையோரம் திடீர் தீ விபத்து; விருத்தாசலம் அருகே பரபரப்பு

சாலையோரம் திடீர் தீ விபத்து; விருத்தாசலம் அருகே பரபரப்பு

விருத்தாசலம் : கோ.பூவனுாரில் சாலையோரம் கொட்டபட்டிருந்த எள் செடி கழிவுகள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒருமாதமாக எள் அறுவடை பணி நடந்தது. இந்நிலையில், விருத்தாசலம் அடுத்த கோ.பூவனுார் பகுதியில் அறுவடை செய்த எள் செடிகளை விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை சாலையில் உலர்த்தி எள் மணிகளை பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.இதன்காரணமாக கோ.பூவனுார் பகுதியில் சாலையோரம் எள் செடி கழிவுகள் மலைபோல் குவிந்து கிடந்தது.நேற்று அதிகாலை அந்த எள் செடி கழிவுகளை மர்மநபர்கள் சிலர் தீயிட்டு கொளுத்தினர். இதனால், தீ மளமளவென பரவியது. இதன்காரணமாக, சாலையில் வகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.தகவலறிந்து வந்த மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையிலான வீரர்கள் நீண்டநேரம் போராடி தீயை அணைத்தனர்.இச்சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ