உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரூ.2.19 கோடி மோசடி வழக்கு; தலைமறைவு வாலிபர் கைது

ரூ.2.19 கோடி மோசடி வழக்கு; தலைமறைவு வாலிபர் கைது

கடலுார் : மளிகை பொருட்கள் கொள்முதலில் முதலீடு செய்து தருவதாக கூறி ரூ.2.19 கோடி மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையை சேர்ந்தவர் அப்துல் அஜிது, 60; இவருக்கு தனது உறவினர் மூலமாக கும்பகோணம், சோழபுரத்தை சேர்ந்த முகமது சுஹைல் என்பவரின் அறிமுகம் கிடைத்தது.அவர், மளிகை பொருட்கள் கொள்முதல் செய்து மொத்த வியாபாரம் செய்வதாகவும், இதில், முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனவும், லாபத்தில் 40 சதவீதம் கமிஷன் தருவதாக கூறினார்.இதனை நம்பி அஜிது கடந்த பிப்., 14ம் தேதி முதல், ஏப்., 30ம் தேதி வரை 2 கோடியே 83 லட்சத்து 51 ஆயிரத்து ரூபாயை முகமது சுஹைலின் வங்கி கணக்கில் செலுத்தினார். பணத்தை பெற்றுக் கொண்ட முகமது சுஹைல் லாபத் தொகை ரூ.63 ஆயிரம் மட்டும் வழங்கினார். அதிர்ச்சி அடைந்த அப்துல் அஜிது பணத்தை கேட்டதும், கொலை மிரட்டல் விடுத்தார்.புகாரின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து முகமது சுைஹலை ஒரு மாதத்திற்கு முன் கைது செய்தனர். தலைமறைவாக இரந்த அவரது தம்பி முகமது முஷரப்பை,23; போலீசார் நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை