உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.2.50 லட்சம் பறிமுதல்

ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.2.50 லட்சம் பறிமுதல்

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே மினி லாரியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற ரூ.2.50 லட்சம் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.விருத்தாசலம் சட்டசபை தொகுதி இருப்பு பகுதியில், நிலையான கண்காணிப்பு குழு அதிகாரி வெங்கடேசன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது, அவ்வழியாக வந்த ஒரு மினி லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், மினி லாரியை ஓட்டி வந்த பேர்பெரியான்குப்பம் கிராமத்தைசேர்ந்த சிவக்குமாரிடம் ஆவணங்கள் இன்றி ரூ.2.50 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அதைத்தொடர்ந்து, அவரிடம் இருந்துபணத்தை பறிமுதல் செய்து, விருத்தாசலம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சையத் மெஹ்மூதிடம், அதிகாரிகள்ஒப்படைத்தனர்.கைப்பற்றப்பட்ட ரூ.2.50 லட்சம் பணம் விருத்தாசலம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.இதுகுறித்து மினிலாரி டிரைவர் சிவகுமாரிடம் வருவாய்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை