உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பேரிகார்டு தடுப்பை மீறி உழவர் சந்தை முன் கடைகள்

பேரிகார்டு தடுப்பை மீறி உழவர் சந்தை முன் கடைகள்

கடலுார்: கடலுார் உழவர் சந்தை முன் நடைபாதை கடைகள் மற்றும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாணும் வகையில் போக்குவரத்து போலீசார் பேரிகார்டுகள் வைத்தது வீணாகியுள்ளது.கடலுார் உழவர்சந்தைக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் தங்களின் வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்தும் நிலை நீடித்து வந்தது. இதேபோன்று, உழவர் சந்தை எதிரில், நடைபாதை வியாபாரிகள், சாலையோரத்தில் கடைகள் வைத்திருந்தனர். இதனால், இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதியடைந்து வந்தனர். இங்கு நெரிசலை தவிர்க்க, பேரிகார்டு வைக்குமாறு எஸ்.பி., ராஜாராம், போக்குவரத்து போலீசாருக்கு அறிவுறுத்தினார்.இதையடுத்து, கடந்த மாதம் 19ம் தேதி போக்குவரத்து போலீசார் அங்கு, 26 பேரிகார்டுகள் வைக்க நடவடிக்கை எடுத்தனர். இங்கு வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை விதித்து பெரிய அளவிலான பேரிகார்டுகள் மற்றும் நடைபாதை வியாபாரிகள் கடை வைப்பதற்கு சிறிய அளவிலான பேரிகார்டுகளை டிராபிக் போலீசார் வைத்தனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்பட்டது.இந்நிலையில், தற்போது போலீசார் வைத்த பேரிகார்டுகளை தாண்டி, நடைபாதை வியாபாரிகள் சாலையோரத்தில் கடைகள் வைத்துள்ளனர். இதை இங்கு பணியில் உள்ள போக்குவரத்து போலீசார் கண்டுகொள்வதில்லை. இதனால், அப்பகுதியில் மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்