| ADDED : ஜூலை 18, 2024 08:38 AM
கடலுார், : கடலுார் கம்மியம்பேட்டை கெடிலம் ஆற்றுப்பாலத்தில் பக்கவாட்டு சுவர் உடைந்துள்ளதால், ஆபத்தான நிலையில் வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர்.கடலுார் பாரதிசாலை, அண்ணா மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், கம்மியம்பேட்டையில் கெடிலம் ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டப்பட்டது. சென்னை மற்றும் சிதம்பரம் மார்க்கத்தில் இருந்து வரும் வாகனங்கள் ஜவான்பவன் சாலை வழியாக செம்மண்டலம் மூலம் சென்று வருகின்றனர். இதனால், கடலுார் பாரதி சாலை, அண்ணா மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த மேம்பாலம் முறையான பராமரிப்பின்றி, பக்கவாட்டு சுவர்கள் உடைந்து சேதமாகியுள்ளது. இதனால், அந்த வழியாக நடந்து செல்பவர்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, பக்கவாட்டு சுவர் முழுமையாக சேதமாகும் முன்பு சரி செய்வதற்கு நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.