உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / துாக்கு போட்டு மாணவி சாவு

துாக்கு போட்டு மாணவி சாவு

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே பள்ளி மாணவி மர்மமான முறையில் துாக்குப்போட்டு இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சேத்தியாத்தோப்பு அடுத்த மதுராந்தகநல்லுாரை சேர்ந்தவர் இளையராஜா. இவரது மனைவி கல்பனா. இவர்களுக்கு இளையராணி, 17; இளவரசி , 15; ஆகிய இரு மகள்கள். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக, இருவரும் கடந்த ஓராண்டாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.தந்தை கட்டுப்பாட்டில் வசித்து வந்த மூத்த மகள் இளையராணி, 17; காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் குப்பைநல்லுாரில் உள்ள பள்ளி விடுதியில் தங்கி, பிளஸ்2 படித்து வந்துள்ளார்.18ம் தேதி வீட்டிற்கு வந்த இளையராணி, துாக்குப்போட்டு இறந்து கிடந்தார். அவரது தந்தையும் வேறு இடத்தில் வசிப்பதால், பாழடைந்த நிலையில் இருந்த வீட்டில் அழுகிய நிலையில் இளையராணியில் உடல் கிடந்தது. தகவலின்பேரில், ஒரத்துார் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி, சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, மாணவி இறந்ததற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ