உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாணவர்கள் முதல் விருப்பமாக கணினி அறிவியல் பாடத்தை தேர்வு செய்யலாம்: கல்வியாளர் அஸ்வின் அட்வைஸ்

மாணவர்கள் முதல் விருப்பமாக கணினி அறிவியல் பாடத்தை தேர்வு செய்யலாம்: கல்வியாளர் அஸ்வின் அட்வைஸ்

கடலுார் : வேலைவாய்ப்பு தளத்தை ஏற்படுத்தி கொடுக்கும் பொறியியல் கல்லுாரிகளில் சேர்ந்து படிப்பவர்கள் தான் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைகின்றனர் என தினமலர் வழிக்காட்டி நிகழ்ச்சியில் கல்வி ஆலோசகர் அஸ்வின் பேசினார். கடலுாரில் நடந்த பிளஸ் 2 மாணவர்களுக்கான தமிழ்நாடு இன்ஜினியரிங் கவுன்சிலிங் விழிப்புணர்வு குறித்து தினமலர் வழிக்காட்டி நிகழ்ச்சியில் கல்வி ஆலோசகர் அஸ்வின் பேசியதாவது; . இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள கல்லுாரிகளின் தரவரிசை பட்டியலில் பிளேஸ்மெண்ட் தகுதி உள்ள கல்லுாரிகளை தேர்வு செய்ய வேண்டும். அந்த கல்லுாரிகளை நேரடியாக சென்று பார்த்து, அங்கு படிக்கும் மாணவர்களிடம் கல்லுாரியின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்து கொள்ள வேண்டும்.பிளேஸ்மெண்ட் இருக்கும் கல்லுாரிகளிலும் ஸ்காலர்ஷிப் தரும் கல்லுாரிகளை ஆராய்ந்து சேர்ந்து படிக்கலாம். தற்போது கணினி அறிவியல் (கம்ப்யூட்டர் சைன்ஸ்) படிப்பவர்களுக்கு தான் வேலை வாய்ப்பு அதிகம் உள்ளது. அதிக சம்பளமும் பெறுகின்றனர். அதனால் கல்லுாரிகளில் சேரும் மாணவர்கள் முதல் சாய்ஸ்சாக கணிணி அறிவியல் பாடத்தை தேர்வு செய்யலாம். கணிணி அறிவியல் துறையில் ஏ.ஐ.பி.ஐ., ஏ.ஐ.எம்.ஐ., சைபர் செக்கியூரிட்டி போன்ற படிப்புகள் அதிக வேலை வாயப்புகளை ஏற்படுத்தி கொடுக்கிறது. இந்திய பாதுகாப்பு துறையில் கணிணி அறிவியல் துறையைச் சேர்ந்த சைபர் விங் என்ற தனித்துறையே தற்போது செயல்பட்டு வருகிறது. அதனால் நல்ல வாய்ப்புகளை கொடுக்க கூடிய கல்லுாரிகளில் சேர வேண்டும். கல்லுாரி படிப்புகளில் சர்க்கியூட் துறை, நான் சர்க்கியூட் துறை என இரு பிரிவுகள் உள்ளன. கம்ப்யூட்டர் சார்ந்த படிப்புகள் சர்க்கியூட் துறை எனவும், மற்ற இன்ஜினியரிங் படிப்புகள் நான் சர்க்கியூட் துறை என கருதப்படுகிறது. அதிக கட் ஆப் மதிப்பெண் உள்ளவர்கள் கணிணி அறிவியல் படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். கணிணி அறிவியல் துறையில் அதிக போட்டிகள் காணப்படுகிறது. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பிற்கு எப்போதும் வேலை வாய்ப்புகள் உண்டு. மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் பேசிக் கோடிங் எனப்படும் அடிப்படை குறியீட்டு முறையை நன்கு தெரிந்துக்கொள்ள வேண்டும். டேடா ஸ்டக்சர்ஸ் அல்காரீதம், டிஸ்கிரிட் மேத்தமெட்டிக்ஸ், லீனியர் அல்ஜிப்ரா, பிராபலிட்டி ஸ்சாட்டிஸ்சிக்ஸ் ஆகிய நான்கு பாடப்பிரிவுகள் உலக அளவில் பொறியியல் துறையில் சிறந்த பாடமாக கருதப்படுகிறது. கணிணி அறிவியல் இன்ஜினியரிங் படித்தவர்கள் இணைய தளம் மூலம் வேலை தேடும் வகையில் லீட் கோட், டாப் கோட், கோட் செப், அப்ரியானல் ஆகிய நான்கு பெரிய இணை தளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த இணைய தளத்தின் மூலம் திறமை மிக்கவர்கள் தங்களுக்கான வேலைகளை தேடிக்கொள்ளலாம். மாணவர்கள் நல்ல கல்லுாரியில் படித்தால் மட்டுமே ஜெயிக்க முடியும். சலுகைகளுக்காக தரம் குறைந்த கல்லுாரியில் படித்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய முடியாது. யார் ஒருவன் பெற்றோர்களையும், புத்தகங்களையும் நேசிக்கின்றானோ அவன் தான் வாழ்க்கையில் வெற்றியை காண்கிறான் என கல்வி ஆலோசகர் அஸ்வின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை