உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தரமற்ற சிமெண்ட் சாலை பணி: எம்.எல்.ஏ.,ஆய்வு

தரமற்ற சிமெண்ட் சாலை பணி: எம்.எல்.ஏ.,ஆய்வு

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு வடக்கு சென்னிநத்தத்தில் தரமில்லாமல் சிமென்ட் சாலை பணி நடப்பாதக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் புவனகிரி எம்.எல்.ஏ., அருண்மொழிதேவன் ஆய்வு செய்தார்.சேத்தியாத்தோப்பு பேரூராட்சியில் புதிய சிமென்ட் சாலை போடப்பட்டு வருகின்றன. புவனகிரி தொகுதி எம்.எல்.ஏ., அருண்மொழிதேவன் தேர்வு செய்து கொடுத்த வடக்கு சென்னிநத்தம் சாலை ரூ. 86 லட்சத்தில் 1300 மீட்டர் புதிய சிமென்ட் சாலை கடந்த வாரம் போடப்பட்டுள்ளது. தரமின்றி போடப்பட்டடதால் சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. போதிய சிமென்ட், ஜல்லி கலவைகள் இல்லாமல் தரமற்ற சாலை பணி குறித்து அப்பகுதி மக்கள் அருண்மொழிதேவனிடம் தொலைபேசியில் புகார் தெரிவித்தனர்.பொதுமக்கள் புகாரினை தொடர்ந்து நேற்று எம்.எல்.ஏ., அருண்மொழிதேவன் வடக்கு சென்னிநத்தம் சாலையை ஆய்வு செய்தார்.பின்னர் பேரூராட்சி செயல் அலுவரிடம் தொலை பேசியில் தொடர்பு கொண்டு பேசிய அருண்மொழிதேவன் தரமற்ற சாலை பணிகுறித்து கலெக்டரிடம் நேரடி புகார் அளிக்க போவதாக தெரிவித்து சென்றார். நகரசெயலாளர் மணிகண்டன், வார்டு செயலாளர், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் ராமலிங்கம், தெய்வராஜகுரு, சங்கர், தகவல் தொழில்நுட்ப பிரிவு பிரபாகரன், வார்டு கவுன்சிலர் தங்கமணி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி