உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / காதல் தம்பதியை தாக்க முயற்சி கடலுாரில் திடீர் பரபரப்பு

காதல் தம்பதியை தாக்க முயற்சி கடலுாரில் திடீர் பரபரப்பு

கடலுார்: கடலுாரில் காதல் புதுமண தம்பதியை தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 24 வயது எம்.பி.ஏ., பட்டதாரி வாலிபரும், புதுச்சேரியை சேர்ந்த 22 வயது எம்.பி.ஏ., பட்டதாரி பெண்ணும், காதலித்து வந்தனர்.இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவிக்கவே, இருவரும் வீட்டை விட்டு வௌியேறி நேற்று முன்தினம் கடலுார், தேவனாம்பட்டினம், சிவன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். புதுமண தம்பதி நேற்று கடலுாரில் உள்ள துணிக்கடைக்கு துணி எடுக்க சென்றனர்.அங்குவந்த, இருவரின் உறவினர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது புதுமணத்தம்பதியை தாக்க முயன்றனர்.தகவலறிந்த கடலுார் புதுநகர் போலீசார் இருதரப்பினரையும ஸ்டேஷனக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.இந்நிலையில் இளம்பெண் மாயமானது குறித்து வழக்கு பதிவு செய்திருந்த புதுச்சேரி போலீசார், கடலுார் புதுநகர் போலீஸ் ஸ்டேஷனக்கு வந்தனர். விசாரணையின்போது இளம்பெண், காதல் கணவருடன் செல்வதாக கூறினார்.இதையடுத்து இளம்பெண்ணை கணவருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை