உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பிச்சாவரத்தில் கோடைக்கால முகாம்: பள்ளி மாணவர்கள் 100 பேர் பங்கேற்பு

பிச்சாவரத்தில் கோடைக்கால முகாம்: பள்ளி மாணவர்கள் 100 பேர் பங்கேற்பு

கிள்ளை: பிச்சாவரத்தில், கடலுார் வனக்கோட்டம் சார்பில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்தின் ஒரு நாள் கோடை கால முகாம் நடந்தது.மாவட்ட வன அலுவலர் குருசாமி தலைமை தாங்கி துவக்கி வைத்து, காலநிலை மாற்றம் மற்றும் அதனைத் தவிர்க்கும் முறைகள் குறித்தும் விளக்கினார். வனச்சரகர் இக்பால் வரவேற்றார்.முகாமில், கடலுார் மற்றும் விருத்தாசலம் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் 100 பேர் பங்கேற்றனர். அவர்களை படகில் அழைத்துச் செல்லப்பட்டு பிச்சாவரம் மாங்குரோவ்ஸ் காடுகளைச் சுற்றிக் காண்பித்து, அதன் சிறப்புகள் குறித்தும், ஆலிவ் ரெட்லி கடல் ஆமையின் பாதுகாப்பு பற்றி குரும் படம் மூலம் விளக்கப்பட்டது.முகாமில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக கடல்வாழ் உயிரின உயராய்வு மைய புல முதல்வர் அனந்தராமன், கடல்வாழ் உயிரின உயராய்வு மைய இயக்குனர் கலைச்செல்வன், மாவட்ட வட்டார கல்வி அலுவலர் இளஞ்செழியன், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் எபினேசர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி