உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் சில்வர் பீச்சில் வளர்ச்சி பணிகள் ஆய்வு

கடலுார் சில்வர் பீச்சில் வளர்ச்சி பணிகள் ஆய்வு

கடலுார்: கடலுார் சில்வர் பீச்சில் பூங்கா, ஆடிட்டோரியம் மேடையில் பேவர் பிளாக் ஆகியவை போடும் பணியை மேயர் சுந்தரி ராஜா பார்வையிட்டார்.கடலுார் சில்வர் பீச்சில் உள்ள பூங்கா புதுப்பித்தல், பொதுமக்கள் கலை நிகழ்ச்சிகளை பார்ப்பதற்காக உள்ள ஆடிட்டோரியத்தின் தரைதளத்தில் பேவர் பிளாக் அமைக்கும் பணி ரூ. 5 கோடி மதிப்பில் நடந்து வருகிறது. இப்பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளன. பணிகள் நடந்து வருவதை மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா பார்வையிட்டார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களை கேட்டுக்கொண்டார். மாநகர செயலாளர் ராஜா உட்பட அதிகாரிகள் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை