உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அனுமதியின்றி இயங்கிய டாஸ்மாக் பாருக்கு சீல்

அனுமதியின்றி இயங்கிய டாஸ்மாக் பாருக்கு சீல்

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் அனுமதியின்றி இயங்கிய டாஸ்மாக் பாருக்கு கலால் தாசில்தார் சீல் வைத்தார்.விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டி எதிரே அரசு டாஸ்மாக் கடை (எண்.2470) இயங்கி வருகிறது. கடையின் பின்புறம் உள்ள அறையில் கடந்த ஒரு மாத காலமாக அனுமதியின்றி பார் இயங்கி வந்தது. தகவலறிந்த மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சப் இன்ஸ்பெக்டர் பிரகஸ்பதி தலைமையிலான போலீசார் சென்று, அங்கிருந்த 4 மது பாட்டில்கள், பிளாஸ்டிக் கப், வாட்டர் பாட்டில்கள், சைடீஸ்களை பறிமுதல் செய்தனர்.மேலும் புதுப்பேட்டை சவுந்தரராஜன் மகன் ராஜசேகர், 39, என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து, விருத்தாசலம் உட்கோட்ட கலால் தாசில்தார் தமிழ்ச்செல்வன், வருவாய் ஆய்வாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் அனுமதியின்றி இயங்கிய பாருக்கு சீல் வைத்தனர். அதிகாரிகள் சீல் வைத்து கொண்டிருந்த போது, மதுபிரியர்கள் சைடீஸ் தேடி, உள்ளே வந்ததால் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை