உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம்

ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம்

கடலுார்: கடலுாரில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது.மாநில தலைவர் லட்சுமிபதி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் தாஸ் சிறப்புரையாற்றினார். மாநில பொருளாளர் தியாகராஜன், மாநில மகளிரணி செயலாளர் கிருஷ்ணகுமாரி வாழ்த்துரை வழங்கினர். இதில், தமிழகத்தில் அரசு துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாறுதல் கலந்தாய்வை விரைவில் நடத்த வேண்டும். அரசு நிதியுதவிபெறும் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்களை அரசு பள்ளிக்கு மாற்றுப்பணியில் பணி நிரவல் செய்யும் முடிவை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.அப்போது, மாவட்ட தலைவர் குமரவேல், செயலாளர் முருகன், பொருளாளர் பாலமுரளி கிருஷ்ணன், மகளிரணி செயலாளர் செல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ