உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி

அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி

விருத்தாசலம் : மங்கலம்பேட்டை புறவழிச்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி, பைக்கில் சென்ற வாலிபர் இறந்தார்.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த பாலி கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி மகன் பாலமுருகன், 25. நேற்று முன்தினம் இரவு 11:.25 மணியளவில் பைக்கில், கர்னத்தம் - பில்லுார் பைபாஸ் சாலையில் சென்றார். அப்போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், பாலமுருகன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.அவரது மனைவி சந்தியா, 23, புகாரின் பேரில், மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை