உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாவட்டத்தில் சிறந்த பேரூராட்சியாக மாற்றுவதே லட்சியம் ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி சேர்மன் செல்வி ஆனந்தன்

மாவட்டத்தில் சிறந்த பேரூராட்சியாக மாற்றுவதே லட்சியம் ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி சேர்மன் செல்வி ஆனந்தன்

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சியை மாவட்டத்தில் சிறந்த பேரூராட்சியாக மாற்றுவதே லட்சியம் என சேர்மன் செல்வி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.அவரது பேட்டி:தமிழக முதல்வரின் மு.க.ஸ்டலின் ஆணையின்படி தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் உத்தரவின் பேரில் ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி மக்களின் நலன் கருதி பல்வேறு நீண்டகால செயல் திட்டங்களை செயல்படுத்தி வருகிறேன். நகரில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை நிரந்தரமாக போக்கும் வகையில் அம்ரூத் 2.0 திட்டம் துவங்கப்பட்டு பணிகள் நடந்துவருகிறது. மேலும் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் மின் தகன மயானம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. சண்முகம் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் 50 லட்சம் ரூபாய் செலவில் சுத்திகரிப்பு குடிநீர், தாய்ப்பாலுாட்டும் அறை உள்ளிட்ட வசதிகளுடன் நவீன பேருந்துநிலையம் அமைக்கப் பட்டுள்ளது. நகரின் அனைத்து தெருக்களிலும் 2000க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி கடைவீதி பகுதியில் மழை நீர் மற்றும் கழிவுநீர் கால்வாய்கள் சீரமைக்கும் பணி நடந்துவருகிறது. நகரில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சின்ன திருக்குளம் துார்வாரவும், சிறுவர் பூங்கா அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நபார்டு வங்கி உதவியுடன் தேரோடும் வீதிகள் மற்றும் பிரதான சாலைகள் சீரமைக்கும் பணி நடந்துள்ளது.நகரில் போக்குவரத்து நெரிசலைக்குறைக்க புறவழிச்சாலை அமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் மக்கள் நல திட்டங்கள் மக்களை சென்றடைய அனைத்து பணிகளும் சிறப்பாக நடந்து வருகிறது. ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சியை மாவட்டத்தில் சிறந்த பேரூராட்சியாக மாற்றுவதை குறிக்கோளாக கொண்டு செயல் பட்டு வருகிறேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ