உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வாலிபர் மீது தாக்குதல் மர்ம நபர்களுக்கு வலை

வாலிபர் மீது தாக்குதல் மர்ம நபர்களுக்கு வலை

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே வாலிபரை இரும்பு பைப்பால் தாக்கிய, மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.பரங்கிப்பேட்டை அடுத்த அருண்மொழிதேவன் கிராமத்தை சேர்ந்தவர் முத்துவேல். இவரது, மகன் சண்முகசுந்தரம், 29; இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே உள்ள டீக்கடையில் இருந்தபோது மர்ம நபர்கள் நான்கு பேர் வந்து சண்முகசுந்தரத்தை இரும்பு பைப்பால் தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டனர். இதில், படுகாயமடைந்த சண்முசுந்தரம் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர்.புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப் பதிந்து, மர்ம நபர்களை தேடிவருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை