உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பாலம் கட்டி முடித்தும் பயன்படுத்த முடியவில்லை

பாலம் கட்டி முடித்தும் பயன்படுத்த முடியவில்லை

நெல்லிக்குப்பம், : பாலம் கட்டும் பணி முடிந்தும் இணைப்பு சாலை போடாததால் வாகனங்களில் செல்ல முடியாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். நெல்லிக்குப்பம் நகராட்சி திடீர்குப்பத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த பகுதிக்கு வெள்ளப்பாக்கத்தான் வாய்க்காலை கடந்து செல்ல வேண்டும்.வாய்க்காலின் குறுக்கே இருந்த பாலம் உடைந்து சேதமடைந்ததால் பல லட்சம் செலவில் புதிய பாலம் கட்ட டெண்டர் விட்டு பணி துவங்கியது. இந்த பணி நடந்ததால் வாகனங்களில் செல்ல முடியாத நிலையில் தற்போது பாலத்திற்கான கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.ஆனால் மக்களின் இந்த மகிழ்ச்சி நீடிக்காத வகையில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு பல நாட்களாகியும் பாலத்தின் இருபுறத்திலும் இணைப்பு சாலை அமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பாலத்தை பயன்படுத்த முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். டெண்டர்விட்டு பணி முறையாக முடிந்ததா என அதிகாரிகள் ஆய்வு செய்யாமல் அலட்சியமாக இருப்பதால் மக்கள் சிரமப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ