உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாவட்டத்தில் சதம் அடித்த வெயில்: வெப்ப காற்று வீசியதால் பொதுமக்கள் அவதி

மாவட்டத்தில் சதம் அடித்த வெயில்: வெப்ப காற்று வீசியதால் பொதுமக்கள் அவதி

கடலுார், : காட்டுமன்னார்கோவில், விருத்தாசலம் உள்ளிட்ட நான்கு தாலுக்காவில் சதம் அடித்த கடும் வெயிலால் மக்கள் அவதியடைந்தனர்.கடலுார் மாவட்டத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை மற்றும் வடக்கிழக்கு பருவ மழை குறைந்தது. அதிக மழை கிடைக்கும் வடக்கிழக்கு பருவ மழை சராசரி அளவு 120 செ.மீ., விட குறைவாக வெறும் 93 செ.மீ., மழை பெய்தததால், தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வறட்சி நிலவுகிறது. மாவட்டத்தில் கடந்த நான்கு மாதங்கள் மழை இல்லாததால் தண்ணீர் பற்றாக்குறை மற்றும் வறட்சியால் வெயிலில் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் கோடை காலம் துவங்கும் முன்னரே கடும் வெயில் தாக்கம் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டனர். கடந்த இரு வாரங்களாக மாவட்டத்தில் கடலோர பகுதியில் வெயில் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டன. ஆனால் பண்ருட்டி, வெய்வேலி, விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் வெயில் தாக்கம் அதிகம் உணரப்பட்டது. கோடை காலத்திற்கு முன்னரே மாவட்டத்தின் முதல் முறையாக பல இடங்களில் வெயில் சதம் அடிக்க துவங்கியது. விருத்தாசலம், திட்டக்குடியில் 107 டிகிரி பாரான்ஹீட், பண்ருட்டி, நெய்வேலி 105 டிகிரி, காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் 100 டிகிரி, கடலுார் 98 டிகிரி என வெப்பம் பதிவாகியுள்ளது. கடும் வெயில் காரணமாக பகல் 12 மணிக்கு மேல் ரோடுகளில் வகனம் மற்றும் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. கடந்த ஆண்டு இதே நாளில் 95 டிகிரி பாரான்ஹீட் அளவில் காணப்பட்டன. மாவட்டத்தில் முன்னதாகவே வெயில் சதம் அடிக்க துவங்கியுள்ளதால், மே, ஜூன் மாதங்களில் மேலும் வெயில் அளவு அதிகரிக்கும் என மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ