| ADDED : ஜூலை 28, 2024 06:38 AM
ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் எம்.ஜி.ஆர். நகரைச்சேர்ந்தவர் மணிகண்டன், 26; பூக்கடை வைத்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 10 மாத குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் மதியம் விருத்தாசலத்தில் இருந்து பஸ்சில் வந்த பூ பார்சலை இறக்கியது தொடர்பாக, மணிகண்டனுக்கும், ஸ்ரீமுஷ்ணத்தில் மற்றொரு இடத்தில் பூக்கடை வைத்திருக்கும் பாண்டியன் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.அப்போது, மணிகண்டனை பாண்டியன் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மனவேதனையடைந்த மணிகண்டன் நேற்று முன்தினம் மாலை 4:00 மணியளவில் வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.இதை பார்த்த மணிகண்டன் மனைவி சத்தம்போட்டார். உடன் அருகில் இருந்தவர்கள் மணிகண்டனை மீட்டு ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த போது ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.இந்நிலையில், நேற்று மதியம் மணிகண்டனின் உறவினர்கள் ஸ்ரீமுஷ்ணம் முன்பு திரண்டு, மணிகண்டன் தற்கொலைக்கு காரணமான பாண்டியனை கைது செய்ய கோரினர். ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாண்டியனை கைது செய்தனர்.