உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / திட்டக்குடி மார்க்கெட் கமிட்டிக்கு நிரந்தர கட்டடம் தேவை

திட்டக்குடி மார்க்கெட் கமிட்டிக்கு நிரந்தர கட்டடம் தேவை

திட்டக்குடி : திட்டக்குடி மார்க்கெட் கமிட்டிக்கு, விவசாயிகள் நலன் கருதி, நிரந்தர கட்டடம் அமைத்துத்தர வேண்டும் என நகராட்சி கவுன்சிலர் சுரேந்தர் கோரிக்கை விடுத்துள்ளார்.அவர் கூறியதாவது:திட்டக்குடி மார்க்கெட் கமிட்டி மிகவும் பழமையானது. சேலம், ஆத்துார், தலைவாசல், பெரம்பலுார் உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள், விளைபொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்தனர். இதனால் திட்டக்குடி பகுதி வணிக ரீதியாக உயர்ந்த நிலையில் இருந்தது. 2010ம் ஆண்டு இடமாற்றம் செய்யப்பட்ட பிறகு விவசாயிகள், வியாபாரிகள் ஆதரவின்றி விளைபொருட்கள் வரத்து குறைந்தது.மார்க்கெட் கமிட்டி தற்போது இயங்கிவரும் இடத்தில் போதுமான வசதிகள் இல்லாமல் விவசாயிகள், வியாபாரிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். கூத்தப்பன்குடிகாடு பகுதியில் சொந்த கட்டடம் கட்டுவதற்காக இடத்தை அதிகாரிகள் பார்வையிட்டுச் சென்றனர். அம்முயற்சியும் தற்போது கிடப்பில் உள்ளது. விவசாயிகள் நலன்கருதி கூத்தப்பன்குடிகாட்டில் மார்க்கெட் கமிட்டிக்கு அனைத்து வசதிகளுடன் சொந்த கட்டடம் கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.திட்டக்குடி மணல்மேடு பகுதியில் பழுதடைந்த நிலையிலுள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய கட்டடங்களை இடித்து அகற்றிவிட்டு, நடைபயிற்சி வசதியுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும். போதிய இடவசதி இல்லாமல், வாடகை கட்டடத்தில் இயங்கிவரும் கூத்தப்பன்குடிகாடு அங்கன்வாடி மையத்திற்கு, சொந்த கட்டடம் அமைக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ