உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

பெண்ணாடம்: பெண்ணாடம், மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் வேல்முருகன், 42; கொத்தனார். நேற்று முன்தினம் இரவு தனது ஸ்கூட்டரை அதே பகுதியில் உள்ள மலை மாரியம்மன் கோவிலுக்குள் நிறுத்தி விட்டு வழக்கம்போல் துாங்கச் சென்றார்.நேற்று காலை 9:30 மணியளவில் ஸ்கூட்டர் மர்மமான முறையில் கொழுந்துவிட்டு எரிந்ததைக்கண்டு அப்பகுதி மக்கள் கூச்சலிட்டனர். அவர்கள் ஓடிவந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். ஸ்கூட்டர் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. தகவலறிந்த பெண்ணாடம் போலீசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை