உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / திருக்கல்யாண உற்சவம்

திருக்கல்யாண உற்சவம்

நடுவீரப்பட்டு: பண்ருட்டியில் தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் ராதா -மாதவ திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழாவை முன்னிட்டு 17 ம் தேதி காலை 7:00 மணிக்கு மங்கள இசை, 8:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, 8:45 மணிக்கு அஷ்டபதி பஜனை ஆரம்பமானது.மாலை 5:00 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்,7:00 மணிக்கு அபிநய திவ்யநாம பஜனை நடந்தது.நேற்று காலை 7:30 மணிக்கு சம்ரதாய உஞ்சவிர்த்தி பஜனை நடந்தது.8:30 மணி முதல் மதியம் 12:00 மணிவரை அபிநய திவ்யநாம பஜனை மற்றும் ராதா மாதவ திருமண உற்சவம் நடந்தது.12:30 மணிக்கு ஆஞ்சநேய உற்சவம் நடந்தது.விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ