உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முருகன்குடியில் திருக்குறள் வகுப்பு

முருகன்குடியில் திருக்குறள் வகுப்பு

பெண்ணாடம் : பெண்ணாடம் அடுத்த முருகன்குடியில் வள்ளலார் பணியகம் சார்பில், திருக்குறள் வகுப்பு துவக்க நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, வள்ளலார் பணியகம் மாவட்ட பொறுப்பாளர் முருகன் தலைமை தாங்கி, திருக்குறள் வகுப்பை துவக்கி வைத்தார். பிரதாபன் வரவேற் றார். அப்போது, பிரகாஷ், செல்வகுமார், வீராசாமி, தமிழ்மொழி, கனிமொழி, மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.முனைவர் சுப்ரமணியசிவா பங்கேற்று, திருக்குறள் நெறிமுறைகள் குறித்தும், 'வான் சிறப்பு' அதிகாரத்தில் இடம் பெற்றுள்ள திருக்குறளின் நெறிகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை