உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பா.ஜ., ஆர்ப்பாட்டத்தில் தள்ளுமுள்ளு கடலுாரில் மறியல்: 50 பேர் கைது

பா.ஜ., ஆர்ப்பாட்டத்தில் தள்ளுமுள்ளு கடலுாரில் மறியல்: 50 பேர் கைது

கடலுார்: கடலுாரில் பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டத்தின் போது, போலீசாரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசை கண்டித்து மறியலில் ஈடுபட்ட பா.ஜ., வினர் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.தமிழக காங்., தலைவர் செல்வபெருந்தகை பற்றி அண்ணாமலை பேசியதை கண்டித்து, நேற்று முன்தினம் கடலுாரில், காங்., சார்பில், அண்ணாமலை உருவ பொம்மை எரிக்கப்பட்டது.இதனை கண்டித்தும் உருவபொம்மை எரித்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி பா.ஜ.,வினர் நேற்று கடலுார் தலைமை தாபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். நகர தலைவர் வெங்கடேசன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது பா.ஜ.,வினர் திடீரென செல்வப்பெருந்தகை உருவ பொம்மையை எரிக்க எடுத்து வந்தனர். உருவ பொம்மையை போலீசார் பிடுங்கியதால், இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் எஸ்.பி.,யிடம் மனு கொடுக்க ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது டி.எஸ்.பி., பிரபு ஊர்வலம் செல்ல அனுமதி இல்லை என தடுத்தார். ஆத்திரமடைந்த பா.ஜ.,வினர் பாரதி ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.இதனால் 15 நிமிடம் போக்குவரத்து பாதித்தது. உடன் மறியலில் ஈடுபட்ட 6 பெண்கள் உள்ளிட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை